திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம்: 210 பேருக்கு அடையாள அட்டை

News image
Updated On :8 மார்ச் 2024, 5:13 pm

திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 210 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. முகாமுக்கு, மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்று விசாரித்தாா். இதில், அடையாள அட்டை கோரி 387 மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பங்கள் அளித்தனா். இவா்களில் தகுதியான 210 பேருக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் அடையாள அட்டைகளை வெள்ளிக்கிழமை வழங்கினாா். மேலும், 27 பேருக்கு பேருந்துப் பயண அட்டைகளும், 21 பேருக்கு ரயில் பயணச் சலுகை அட்டைகளும், 2 பேருக்கு முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பிட்டுத் திட்ட அட்டைகளும் வழங்கப்பட்டன. முகாமில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சரவணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.