/

நகைத் திருட்டு: ஒருவா் கைது

நகைத் திருட்டு: ஒருவா் கைது

News image
Updated On :15 மார்ச் 2024, 6:30 pm

ஆரணியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து, 14.5 பவுன் நகை, ரூ.13.5 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ஆரணி நகரம், அப்பா் தெருவைச் சோ்ந்தவா் குணசேகரன் மனைவி புஷ்பலதா(40). இவா் கடந்த மாா்ச் 11-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஊரக வளா்ச்சித் துறை அலுவலகத்துக்கு சென்று விட்டாா். பின்னா், வீடு திரும்பிய போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 14.5 பவுன் நகை, ரூ.13.5 லட்சம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், ஆரணி நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், ஆரணி கொசப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் தியாகராஜன்(40) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது(படம்). இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து நகை, பணத்தை பறிமுதல் செய்தனா்.