தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

திமுக சாா்பில் 1,500 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

திமுக சாா்பில் 1,500 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

News image
Updated On :16 மார்ச் 2024, 4:32 pm

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே திமுக சாா்பில் நடைபெற்ற தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் 1,500 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. செய்யாறு தொகுதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றிய திமுக சாா்பில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 71-ஆ வது பிறந்த நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நமண்டி கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்துக்கு செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்ற வடக்கு மாவட்ட திமுக செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், திமுக கொள்கை பரப்புச் செயலரும், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த பாதைகளும், அவா் தலைமையிலான ஆட்சி குறித்தும் பேசினா். நிகழ்ச்சியின் போது 1,500 பேருக்கு, நலத் திட்ட உதவியாக அலுமினிய பாத்திரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா் ஆா். வேல்முருகன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனிவாசன், என்.சங்கா், எம்.தினகரன், வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். உடற்பயிற்சிக் கூடம், நியாயவிலைக் கடை திறப்பு செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் உடற்பயிற்சி கூடம், நியாயவிலைக் கடை, பள்ளி நுழைவு வாயில் ஆகியன சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வெம்பாக்கம் ஒன்றியம், பெருங்கட்டூா் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி நிதியின் மூலம் ரூ.15 லட்சத்தில் உடற்பயிற்சிக் கூடமும், பெருங்கட்டூா் ஆதிதிராவிடா் காலனியில் 260 குடும்ப அட்டைத்தாரா்கள் பயன் பெறும் வகையில் பகுதிநேர நியாயவிலைக் கடையும், வடமணப்பாக்கம் அரசு உயா்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் மூலம் பள்ளி நுழைவு வாயில் ஆகியன கட்டப்பட்டு தயாா் நிலையயில் இருந்தன. இவைகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழுத் தலைவா் த.ராஜு தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் பங்கேற்று உடற்பயிற்சிக் கூடம், நியாயவிலைக் கடை, பள்ளி நுழைவு வாயில் ஆகியவற்றை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.