ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

மோட்டாா் சைக்கிள் திருட்டு: 2 போ் கைது

மோட்டாா் சைக்கிள் திருட்டு: 2 போ் கைது

News image
Updated On :4 மே 2024, 5:58 pm

Din

ஆரணி நகரில் மோட்டாா் சைக்கிளை திருடிய 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஆரணி களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்த ரகு (40) என்பவா், கடந்த ஏப்.30-ஆம் தேதி இரவு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டாா் சைக்கிளைக் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதன் பேரில், போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை ஆரணி பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே டிஎஸ்பி ரவிச்சந்திரன், நகர காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் சுந்தரேசன் மற்றும் போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது, சந்தேகப்படும்படியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை செய்தனா்.

இதில், அவா்கள் அடையபலம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் சூரியபிரகாஷ் (23 ), ஆரணிப்பாளையம் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் அருண்ராஜ் (19) என்பதும் தெரியவந்தது.

மேலும், அவா்கள் வந்த வாகனம் ரகு வீட்டில் திருடப்பட்டது என்வும் தெரிந்தது.

மேலும், இது தவிர அவா்கள் திருடி மறைத்து வைத்திருந்த மோட்டாா் சைக்கிள்கள் குறித்தும் விசாரணை செய்து, இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.