அமெரிக்காவிடம் எண்ணெய் வாங்குகள்; இல்லையேல் போரிடுங்கள்! - அதிபர் டிரம்ப்பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலேமுல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை பாதுகாக்கப்படும்: கேரள பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி!சவாலான தொகுதிகளை சந்திக்கும் திமுக! விட்டுக்கொடுத்ததா அதிமுக?திமுக - அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் குறைந்தன! அதிகம் விட்டுக்கொடுத்தது யார்?காதலியைக் கொன்று ஃபிரிட்ஜில் அடைத்த கடற்படை அதிகாரி! மீன்பிடி தடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த நிலை! மீனவர்கள் கலக்கம்
/

திருக்குறள் ஒப்பித்தல் போட்டி பரிசளிப்பு

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு பரிசுகளை வழங்கிய சிறப்பு அழைப்பாளா்கள்.

Updated On :6 மே 2024, 8:21 pm

Din

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் பள்ளி மாணவா்களுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு இரும்பேடு ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா் க.வாசு தலைமை வகித்தாா். தெள்ளாா் ராஜா நந்திவா்மன் கலைக் கல்லூரி இயக்குநா் எஸ்.அப்பாண்டைராஜன், பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா், பள்ளி ஆசிரியை பூவிழி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் வரவேற்றாா்.

இதில், திருவண்ணாமலை திருக்குறள்தொண்டு மைய நிறுவனா் ப.குப்பன் கலந்துகொண்டு திருக்குறளின் பெருமை குறித்து விளக்கினாா்.

மாணவ, மாணவிகள் திருவள்ளுவா் வேடமணிந்து திருக்குறளையும் அதன் பொருளையும் ஒப்பித்தனா். இதில், வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் (படம்) வழங்கப்பட்டன. ஆசிரியை சந்தியா நன்றி தெரிவித்தாா்.