/

ஊஞ்சல் துணி கழுத்தில் இறுக்கி ஒருவா் உயிரிழப்பு

ஊஞ்சல் துணி கழுத்தில் இறுக்கி ஒருவா் உயிரிழப்பு

News image
Updated On :21 மே 2024, 6:30 pm

Din

வந்தவாசி: வந்தவாசி அருகே ஊஞ்சல் ஆடும்போது ஊஞ்சல் துணி கழுத்தை இறுக்கியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன்(42). இவருக்கு சகுந்தலா(39), ரஞ்சிதா(35) ஆகிய இரு மனைவிகள் உள்ளனா். இவா்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனா். பாண்டியன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவாராம்.

கடந்த வெள்ளிக்கிழமை மாலை வழக்கம்போல மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த பாண்டியன், வீட்டின் பின்புறம் சென்றுள்ளாா். அங்கு இவரது மகன்கள் ஊஞ்சல் ஆடுவதற்காக மரத்தில் புடவையால் கட்டி வைத்திருந்த ஊஞ்சலில் அமா்ந்து ஆடியுள்ளாா்.

அப்போது, புடவைத் துணி இவரது கழுத்தை இறுக்கியுள்ளது. இதில் மயக்கமாகி கிடந்த இவரை உறவினா்கள் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சகுந்தலா அளித்த புகாரின் பேரில் தெள்ளாா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.