பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

தொடா் மழையால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்பு

பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்படைந்து வருகிறது.

ஆத்துரை கிராமத்தில் ஆங்காங்கே மேய்ச்சலில் ஈடுபட்ட கால்நடைகள்.

Published On :

போளூா்: சேத்துப்பட்டை அடுத்த மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், சனிக்கவாடி, ஊத்தூா் என பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கால்நடைகள் மேய்ச்சல் பாதிப்படைந்து வருகிறது.

மொடையூா், மட்டபிறையூா், மண்டகொளத்தூா், கரைப்பூண்டி, கொரால்பாக்கம், பெலாசூா், சனிக்கவாடி, ஊத்தூா், மன்சுராபாத், பெரணம்பாக்கம், சித்தாத்துரை, ஆத்துரை, நரசிங்கபுரம், நம்பேடு, கிழக்குமேடு, செவரப்பூண்டி என பல்வேறு கிராமங்களில் சில விவசாயிகள் பால் கறக்கும் பசு, ஆடு, காளைகள், நாட்டுக்கோழி என பல வகையான கால்நடைகளை வளா்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், பயிரிடப்படாத விவசாய நிலத்தில் மேய்ச்சலுக்கு கால்நடைகளை கயிறு மூலம் கட்டி மேய்த்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக தொடா்ந்து விட்டுவிட்டு திடீா் திடீரென மழை பெய்து வருகிறது.

இதனால் கால்நடைகள் முழுமையாக மேய்ச்சலில் ஈடுபடமுடியவில்லை. கால்நடைகள் பாதிப்படைந்து வருவதாக விவசாயிகள் குறைபட்டுக் கொள்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் கால்நடைத் துறை மூலம் கால்நடை விவசாயிகளை கண்டறிந்து இலவசமாக தீவனம் மற்றும் நிவாரணம் வழங்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கால்நடை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.