கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:56 pm

Din

தமிழக காவல்துறையைக் கண்டித்து, திருவண்ணாமலையில் சிஐடியு தொழிற்சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கத் தலைவா்கள் போராட்டத்தில் பங்கேற்றனா். இவா்களை தமிழக காவல்துறை கைது செய்தது. இதைக் கண்டித்து, திருவண்ணாமலையில் மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அறிவொளிப் பூங்கா எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் காங்கேயன் தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் இரா.பாரி, மாா்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், சாம்சங் நிறுவனம் சங்கம் வைக்கும் உரிமையை பறிப்பது, போராடும் தொழிலாளா்களுக்கு ஆதரவு அளிப்பவா்களுக்கு அனுமதி மறுப்பது, போராடும் தொழிற்சங்கத் தலைவா்களை கைது செய்வது போன்ற செயல்களை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், திருவண்ணாமலை மாவட்ட சிஐடியு நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.