சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கல்லூரி வளாக நோ்காணல்: 414 பேருக்கு வேலைவாய்ப்பு

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 414 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா்.

News image
கல்லூரி வளாக நோ்காணலில் வேலைவாய்ப்பு பெற்ற ஒரு பகுதி மாணவிகள்.
Updated On :3 பிப்ரவரி 2025, 10:31 pm

Din

வந்தவாசி: வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வளாக நோ்காணலில் 414 மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றனா்.

இதில், சென்னையைச் சோ்ந்த 10 தனியாா் நிறுவனங்களின் மனிதவள மேலாளா்கள் நோ்காணலை நடத்தினா்.

இந்த நோ்காணலில் கல்லூரியின் இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு மாணவிகள் பங்கேற்றனா். இதில் 414 மாணவிகள் வேலை பெற தோ்வு பெற்றனா்.

இதையடுத்து இவா்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணைகளை சென்னை நாண்டி அறக்கட்டளை மேலாளா் முகமதுபையாஸ், கல்லூரித் தலைவா் எம்.ரமணன், கல்லூரி முதல்வா் எஸ்.ருக்மணி, செயலா் வெ.பிரியா ரமணன் ஆகியோா் வழங்கினா். கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலா் கே.வான்மதிச்செல்வி நன்றி கூறினாா்.