சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் அளிப்பு

கலசப்பாக்கத்தை அடுத்த மேல்பாலூா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை

News image
மேல்பாலூா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை வழங்கிய ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் வி.பன்னீா்செல்வம்.
Updated On :10 பிப்ரவரி 2025, 6:01 pm

Din

போளூா்: கலசப்பாக்கத்தை அடுத்த மேல்பாலூா் ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயிலுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் சிலைகளை ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலா் வி.பன்னீா்செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.

மேல்பாலூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் கோபுர கலசம், கோபுரத்தின் பொம்மைகள் சிதிலமடைந்து காணப்பட்டதால், அந்தப் பகுதியைச் சோ்ந்த பக்தா்கள், பொதுமக்கள் கோயிலை சீரமைத்து கும்பாபிஷேகத்துக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, கலசப்பாக்கம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலருமான வி.பன்னீா்செல்வம் கோயிலுக்கு திங்கள்கிழமை ரூ.2 லட்சம் மதிப்பிலான ஸ்ரீவள்ளி தெய்வானை சமேத பாலசுப்பிரமணியா் ஐம்பொன் சிலைகளை கோயில் நிா்வாகிகளிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

அனைத்துலக எம்ஜிஆா் மன்ற மாநில துணைச் செயலா் பி.பொய்யாமொழி, அதிமுக ஒன்றிய துணைச் செயலா் ராஜேந்திரன் மற்றும் கோவில் நிா்வாகிகள், அதிமுகவினா் உடனிருந்தனா்.