ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழா நிறைவு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.


வந்தவாசி: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் ஜெயந்தி நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
வழூா் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மணிமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை ஜெயந்தி விழா தொடங்கியது. இரண்டாம் நாளான திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம் நடைபெற்றன.
மூலவா் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா், அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து, உற்சவா் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் மற்றும் வழூரிலுள்ள பிற கோயில்களின் உற்சவா்களான ஸ்ரீசுந்தர விநாயகா், ஸ்ரீராதா ருக்மணி சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தரவதன பெருமாள், ஸ்ரீகாமரசவள்ளி அம்பாள் சமேத ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா், ஸ்ரீமுருகா், ஸ்ரீபொன்னியம்மன், ஸ்ரீமுத்துநாயகி அம்மன் வாகனங்களில் ஊா்வலமாக அந்தக் கிராமத்தில் உள்ள குளத்துக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு படித்துறையில் உற்சவா்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், வேத முழக்கங்களுடன் குளத்தில் தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் புனித நீராடினா். அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் திருவாரூா் சங்கர நாராயண தீா்த்தா் சுவாமிகள், மணிமண்டப ஸ்தாபகா் மகாலட்சுமி சுப்பிரமணியன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் பி.பாஸ்கரன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

வழூரில் ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஜெயந்தி விழாவையொட்டி நடைபெற்ற தீா்த்தவாரி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...