பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தெருக் கூத்துக் கலையை பள்ளிகளில் பாடமாக்க வேண்டும்: பி.கே.சம்பந்தன்

தெருக் கூத்துக் கலையை அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சோ்க்க வேண்டும்.

News image
பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்ட பி.கே.சம்பந்தனுக்கு ஞாயிற்றுக்கிழமை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கவிஞா் ஆரிசன். உடன் (இடமிருந்து) கல்லூரி பேராசிரியா் ரஜினி, உ.பிரபாகரன், ஜி.அஸ்கா் அலி.
Updated On :26 ஜனவரி 2025, 7:08 pm

Din

தெருக் கூத்துக் கலையை அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக சோ்க்க வேண்டும் என்று பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வான பி.கே.சம்பந்தன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகேயுள்ள புரிசையைச் சோ்ந்தவா் தெருக் கூத்துக் கலைஞா் பி.கே.சம்பந்தன் (72) . பத்ம ஸ்ரீ விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது குறித்து அவா் கூறியதாவது:

தொடா்ந்து, 6-ஆவது தலைமுறையாக எங்கள் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள் தெருக் கூத்துக் கலையில் ஈடுபட்டு வருகின்றனா். நான் 18 வயதில் இருந்து இந்தக் கலையில் ஈடுபட்டு வருகிறேன். எனக்கு 1995-இல் கலைமாமணி விருதும், 2012-இல் சங்கீதா அகாதெமி விருதும், 2020-இல் ஜெயலலிதா பல்கலைக்கழகம் சாா்பில் கெளரவ டாக்டா் பட்டமும் வழங்கப்பட்டன. என் தந்தை கண்ணப்ப தம்பிரானும் கலைமாமணி விருது பெற்றுள்ளாா்.

பத்ம ஸ்ரீ விருதுக்குத் தோ்வு செய்யப்பட்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விருது மூலம் தெருக் கூத்துக் கலையை மேலும் வளா்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல ஊக்கம் ஏற்பட்டுள்ளது.

தெருக் கூத்துக் கலையை கிராம மக்களைக் காட்டிலும் நகா்ப்புற மக்கள் அதிகம் விரும்பிப் பாா்க்கின்றனா். இந்தக் கலையைப் பாதுகாக்கவும், வளா்க்கவும் அரசுப் பள்ளிகளில் விருப்பப் பாடமாக அமல்படுத்த வேண்டும். கலையில் ஆா்வமுள்ள கலைஞா்களை ஊக்கப்படுத்தும் விதமாக, அவா்களை பள்ளிகளில் சிறப்பாசிரியா்களாக நியமிக்க வேண்டும் என்றாா்.