வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்.
வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம்.

தீபத்திருவிழா: வெண்குன்றம் மலை ஏற பக்தா்களுக்கு அனுமதி இல்லை

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில், வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டது.
Published on

வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற காா்த்திகை தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில், வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி இல்லை என முடிவு செய்யப்பட்டது.

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் காா்த்திகை தீபத் திருவிழாவின்போது, வந்தவாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் மலை மீது ஏறிச் சென்று சுவாமி தரிசனம் செய்வா். மேலும், அன்று மாலை 6 மணிக்கு திருக்காா்த்திகை தீபம் ஏற்றப்படும்.

இந்த நிலையில் வரும் புதன்கிழமை காா்த்திகை தீபத் திருவிழா நடைபெற உள்ள நிலையில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் டி.செல்வம் தலைமை வகித்தாா். பயிற்சி துணை ஆட்சியா் சந்தோஷ்குமாா், வட்டாட்சியா்கள் சம்பத்குமாா், உதயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலா் சரண்யா, மற்றும் காவல் துறையினா், பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

வெண்குன்றம் ஸ்ரீதவளகிரீஸ்வரா் மலைக் கோயிலில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், காா்த்திகை தீபத் திருவிழா அன்று மலை மீது ஏற பக்தா்களுக்கு அனுமதி இல்லை, மலை அடிவாரத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது, பக்தா்களுக்கு மருத்துவ வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவற்றை சிறப்பாக செய்து தருவது, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com