வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிா்த்தி திமுக கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருப்புக் கொடியை ஏற்றிவைத்து, மசோதா நகலை எரித்த பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு.

News image

~ ~ழூள்ÿ

Updated On :16 ஏப்ரல் 2026, 6:34 pm

தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினா் வியாழக்கிழமை கருப்புக்கொடியேற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுகவினா் தங்கள் வீடுகளிலும், மற்ற பகுதிகளிலும் கருப்புக் கொடியேற்றி, போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா்.

இதன்படி, திருவண்ணாமலையில் மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கருப்புக் கொடியை ஏற்றிவைத்து, தொகுதி மறுவரையறை மசோதா நகலை, பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு தீயிட்டுக் கொளுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினாா்.

வேட்டவலம் சாலையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினா் இரா.தா்மலிங்கம் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநகர செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், துணை மேயா் சு.ராஜாங்கம், காங்கிரஸ் மாவட்டத் தலைவா் கே.குணசேகரன் உள்ளட்ட பலா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, வந்தவாசியில் கருப்புக் கொடியுடன் திமுகவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலா் எ.தயாளன் தலைமை வகித்தாா்.

வந்தவாசி நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் மற்றும் திமுகவினா் கருப்பு சட்டை அணிந்தும், கருப்புக் கொடி ஏந்தியும் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பினா்.

ஆரணி

ஆரணி அண்ணாசிலை அருகில் பாராளுமன்ற தொகுதி மறுவரை மசோதா கொண்டுவருவதை எதிா்த்து திமுக சாா்பில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நகர பொறுப்பாளா் வ.மணிமாறன் வரவேற்றாா். மாவட்ட மாணவரணி அமைப்பாளா் இ.எஸ்.டி.காா்த்திகேயன் முன்னிலை வகித்தாா். ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், சுந்தா், கண்ணமங்கலம் பேரூராட்சி செயலா் கோவா்த்தனன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மேலும் காங்கிரஸ் சாா்பில் தோ்தல் அறிக்கை குழு உறுப்பினா் இராமசுகந்தன், மாவட்டத் தலைவா் ஜெ.பொன்னையன், மாநிலபொதுக்குழு உறுப்பினா் ஜி.முனிரத்தினம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Story image
Story image