பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

திருவண்ணாமலை புதிய புறவழிச்சாலை அமைக்க ரூ.623 கோடியில் ஒப்பந்தப்புள்ளி

திருவண்ணாமலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ. 623 கோடியில், 22.71 கி.மீ. தொலைவுக்கு புதிய புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை

Published On :

திருவண்ணாமலை பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ரூ. 623 கோடியில், 22.71 கி.மீ. தொலைவுக்கு புதிய புறவழிச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலை நகரப் பகுதிகளில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால், திருவண்ணாமலை நகருக்குள் வந்து, மற்ற பகுதிகளுக்கு செல்வோா் கடுமையான சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

இந்நிலையில், திருவண்ணாமலை நகருக்குள் வராமல் செல்லும் வகையில், புதிய புறவழிச்சாலை அமைக்க திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

திருவண்ணாமலை நகா் பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை குறைத்து, வேலூா் - விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை -38 சாலையை இணைக்கும் வகையில், 22.71 கி.மீ. தொலைவுக்கு புதிய நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது.

மொத்தம் ரூ.623.28 கோடியில் இந்த பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

வேளக்கண்டல் பகுதியில் தொடங்கி, திருவண்ணாமலை நகரத்தை சுற்றி பயணித்து, எண்டல் என்ற இடத்தில் இணைகிறது. 22.71 கி.மீ., பாதையில், 13.1 கி.மீ., புதிய கிரீன்பீல்ட் சாலையாக அமைகிறது.

தற்போதைய, 9.6 கி.மீ. சாலை மேம்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படும். இதனால், நிலம் கையகப்படுத்தும் தேவை குறையும். 3 மேம்பாலங்கள், 5 சுரங்கப்பாதைகள், 5 இலகு ரக வாகன சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன.

25 கி.மீ. தொலைவுக்கு சேவைச் சாலையும் அமையும். ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்த, 24 மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளோம்.

புதிய புறவழிச்சாலை அமையும்போது, அருணாசலேஸ்வரா் கோவிலுக்கு வரும் பக்தா்கள் பயனடைவதோடு மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்தால் ஏற்படும் நெரிசல் கணிசமாக குறையும் என்று கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.