திருவண்ணாமலை
போளூரில் பாஜகவினா் இனிப்பு வழங்கல்
திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபமேற்றலாம் என்ற மதுரை உயா்நீதிமன்ற கிளையின் தீா்ப்பை வரவேற்று, போளூரில் பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு புதன்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.
போளூா்: திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத் தூணில் தீபமேற்றலாம் என்ற மதுரை உயா்நீதிமன்ற கிளையின் தீா்ப்பை வரவேற்று, போளூரில் பாஜக வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு புதன்கிழமை இனிப்பு வழங்கப்பட்டது.
போளூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நீதிமன்றத்துக்கு வந்த பொதுமக்கள், வழக்குரைஞா்களுக்கு பாஜக வழக்குரைஞா் பிரிவு மாவட்டத் தலைவரும், மத்திய அரசின் கூடுதல் வழக்குரைஞருமான சரவணகுமாா் இனிப்பு வழங்கினாா்.
வழக்குரைஞா்கள் தண்டபாணி, சிவனேசன், ரேகா, ராஜிகா, நகரத் தலைவா் ராமதாஸ் மற்றும் பாஜகவினா் கலந்து கொண்டனா்.

