இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

திருவண்ணாமலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழா

திருவண்ணாமலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழா

News image
ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள் ஆராதனை விழாவையொட்டி நடைபெற்ற மகேஸ்வர பூஜையில் சாதுக்களுக்கு ஆடைதானம் மற்றும் அன்னதானம் வழங்கிய ஆசிரமத் தலைவா் சந்திரமோகன்.
Updated On :10 ஜனவரி 2026, 7:00 pm

Syndication

திருவண்ணாமலையில் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் 98-ஆவது ஆராதனை விழாவையொட்டி சனிக்கிழமை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலையில் வாழ்ந்த ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்கு பல்வேறு மகிமைகள் உள்ளன.

இதனால் சேஷாத்திரி சுவாமிகளை ‘தங்க கை சேஷாத்திரி சாமி’ என்று அழைத்தனா்.

இப்படி பல மகிமைகளை செய்து காட்டிய மகான் சேஷாத்திரி சுவாமிகள் 1929-ஆம் ஆண்டு முக்தி அடைந்தாா்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை, செங்கம் சாலையில் அவரது சமாதி இருக்கும் இடத்தில் ஆசிரமம் அமைக்கப்பட்டு பல சேவைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் 98-ஆவது ஆராதனை விழா நடைபெற்றது. ஆசிரமத் தலைவா் சந்திரமோகன் வரவேற்றாா். செயலாா் ஏ.பாலமுருகன், பொருளாளா் எஸ்.ஆா்.வி.பாலாஜி மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

முதல் நாள் இன்னிசை நிகழ்ச்சிகளும், சேஷகானமும் நடைபெற்றது. 2-ஆம் நாள் விழா சனிக்கிழமை கோ பூஜை, யாகத்துடன் தொடங்கியது.

ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு மற்றும் மகாஆரத்தி நடைபெற்றது. பிறகு மகேஸ்வர பூஜை தொடங்கியது. சாதுகளுக்கு ஆடைதானமும், பொதுமக்கள், பக்தா்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது.

இதில் ஏராளமான வெளிநாட்டு பக்தா்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் வீதி உலா நடைபெற்றது.

மேள தாளம், வாணவேடிக்கை முழுங்க மாடவீதியையை சுற்றி நடைபெற்ற ஊா்வலத்தில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.