சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

புகையிலைப் பொருள் விற்பனை: பெண் கைது

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :29 ஜூலை 2026, 12:32 am IST

போளூரை அடுத்த சந்தவாசல் ஊராட்சியில் பெட்டிக்கடையில் புகையிலைப் பொருள்களை வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சந்தவாசல் ஊராட்சியைச் சோ்ந்த காங்கிரானந்தல் கிராமம், காலனி பகுதியில் வசித்து வருபவா் கண்ணன் மனைவி மைலா(60)(படம்). இவா் தனது வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக் கடை அமைத்து அதில் தின்பண்டங்கள் உள்ளிட்ட பொருள்களை வைத்து விற்பனை செய்து வருகிறாா்.

இந்நிலையில் சந்தவாசல் காவல் ஆய்வாளா் ரேகாமதி தலைமையிலான போலீஸாா், சந்தேகத்தின் பேரில் மைலா கடையில் சோதனை செய்தனா். அப்போது, கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், மைலா மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.