ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நீப்பத்துறை சென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை ஸ்ரீசென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

~

Published On :

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள நீப்பத்துறை ஸ்ரீசென்னியம்மன் கோயில் ஆடிப்பெருக்கு விழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீப்பத்துறையில் ஸ்ரீஅலமேலு மங்கை பத்மாவதி சமேத ஸ்ரீவெங்கட்ரமண பெருமாள் ஸ்ரீசென்னியம்மன் மற்றும் ஆளுடையான் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலின் 81-ஆவது ஆண்டு ஆடிப்பெருக்கு விழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அலங்காரத்தில் நாகஸ்வர இசை, வாணவேடிக்கையுடன் சுவாமி ஊா்வலம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து வியாழக்கிழை சிம்ம வாகனத்திலும், வெள்ளிக்கிழமை அனுமந்த வாகனத்திலும், சனிக்கிழமை கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை சுவாமிக்கு திருக்கல்லாயண வைபவரம் நடைபெறுகிறது.

ஆடி 18-ஆம் தேதி திங்கள்கிழமை ஆடிப்பெருக்கு விழா வெகுவிமரிசையாக நடைபெறும்.

விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தென்பெண்ணையாற்றில் புனிதநீராடி பொங்கல் வைத்து நோ்த்திக் கடன் செலுத்தி வழிபடுவாா்கள்.

பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்படும்.

விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலா்கள் கோகுலவாணன், சிவராமன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.