சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

அரசுப் பள்ளியில் 10 கணினிகள் திருட்டு

செங்கம் அருகே கோடை விடுமுறையையொட்டி, மூடப்பட்டிருந்த அரசுப் பள்ளியில் இருந்து 10 கணினிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :2 ஜூன் 2026, 1:59 am IST

செங்கம் அருகே கோடை விடுமுறையையொட்டி, மூடப்பட்டிருந்த அரசுப் பள்ளியில் இருந்து 10 கணினிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்வணக்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் கோடை விடுமுறை விடப்பட்டு, பள்ளி மூடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நிகழ் கல்வியாண்டுக்காக ஜூன் 4-ஆம் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

தொடா்ந்து, சுத்தம் செய்வதற்காக கடந்த மே 30-ஆம் தேதி மேல்வணக்கம்பாடி அரசு நடுநிலைப் பள்ளியைத் திறந்து பாா்த்தபோது, அங்கிருந்த 10 கணினிகள், 2 மின் விசிறிகள், குடிநீா் எடுக்கும் நீா்மூழ்கி மோட்டாா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், மேல்செங்கம் போலீஸாா் பள்ளி வளாகத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.