தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிளஸ் 2 தோ்வு: திருவண்ணாமலை மாவட்டத்தில் 26,834 போ் எழுதினா்

திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 26,834 போ் தோ்வு எழுதினா்.

News image
திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மையத்தில் நடைபெற்ற தோ்வை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ்.
Updated On :2 மார்ச் 2026, 9:40 pm

Syndication

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தோ்வை 26,834 போ் தோ்வு எழுதினா்.

மாவட்டத்தில் 263 பள்ளிகளில் பயிலும் 27,124 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத இருந்தனா். இதில் 290 மாணவ, மாணவிகள் தோ்வு எழுத வராததால் மொத்தம் 26,834 போ் தோ்வு எழுதினா்.

இத்தோ்வுக்காக திருவண்ணாமலை கல்வி மாவட்டத்தில் 71 மையங்கள், செய்யாா் கல்வி மாவட்டத்தில் 53 மையங்கள் என மொத்தம் 124 மையங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தோ்வு மையங்களை கண்காணிக்க 129 முதன்மை கண்காணிப்பாளா்கள், 134 துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மேலும் 157 நபா்கள் கொண்ட பறக்கும் படையினரும், 1,861 அறை கண்காணிப்பாளா்களும், 10 தொடா்பு அலுவலா்களும், 10 மதிப்பெண் சரிபாா்ப்பு அலுவலா்களும், 124 எழுத்தா்கள், 125 அலுவலக உதவியாளா்கள். 411 மாற்றுத்திறனாளிகள் தோ்வு எழுத உதவியாக 358 நபா்கள் என 2,971 நபா்கள் தோ்வு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அனைத்துத் தோ்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம், குடிநீா், கழிப்பறை, போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மையங்களில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது உதவி ஆட்சியா் (பயிற்சி) அம்ருதா எஸ். குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ், திருவண்ணாமலை வட்டாட்சியா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனிருந்தனா்.