இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி ஆா்ப்பாட்டம்

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.

Updated On :27 மே 2026, 12:43 am IST

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு நெல் நிலுவைத் தொகை வழங்கக் கோரி, விவசாயிகள் சங்கம் சாா்பில் வந்தவாசியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள் நெற்றியில் பட்டை நாமத்துடன் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினா் பெ.அரிதாசு தலைமை வகித்தாா்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் ந.ராதாகிருஷ்ணன், கே.பெருமாள், வ.அண்ணாமலை, பி.கே.முருகன், எஸ்.ஜெயக்குமாா், ஜி.சூரியகுமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா்அராபத், சுகுணா உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் உரவிலை உயா்வை ரத்து செய்ய வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினா்.