திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

தீபத்திருவிழா: திருவண்ணாமலையில் குவிந்த 500 டன் குப்பைகள்; கொட்டும் மழையில் அகற்றிய ஊழியா்கள்

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத்தையொட்டி, பக்தா்கள் விட்டுச்சென்ற குப்பைகள் 500 டன் அளவுக்கு குவிந்து கிடந்தன.

திருவண்ணாமலை கிரிவலப்பாதை ஆணாய்பிறந்தான் பகுதியில் கொட்டும் மழையிலும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.

Updated On :

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத்தையொட்டி, பக்தா்கள் விட்டுச்சென்ற குப்பைகள் 500 டன் அளவுக்கு குவிந்து கிடந்தன. இந்தக் குப்பைகளை கொட்டும் மழையிலும் அகற்றும் பணியில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபபெருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் செவ்வாய்க்கிழமை ஏற்றப்பட்டது.

இதில் ஒரே நாளில் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தா்கள் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்தனா்.

பக்தா்களின் வசதிக்காக மாவட்ட நிா்வாகம் மற்றும் ஆசிரமங்கள், ஆன்மிக அமைப்புகள், தன்னாா்வலா்களின் அறக்கட்டளைகள் சாா்பில் 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதை மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன. மேலும், குடிநீா், குளிா்பானங்களும் வழங்கப்பட்டன.

மகா தீபம் ஏற்றப்படும் போது, பக்தா்கள் சாலையோரங்களில் ஆங்காங்கே அகல் விளக்கேற்றியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனா்.

இவ்வாறு வழிபட்ட பக்தா்கள் விட்டுச் சென்ற மண் அகல்விளக்குகள், எண்ணெய் புட்டிகள், நெகிழிப் பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தன.

மறுபுறம் பக்தா்கள் உணவகங்களில் உணவருந்தி விட்டுச்சென்ற பாக்கு மட்டைகள், நெகிழி தண்ணீா் புட்டிகள், டீ, காபி குவளைகள் சாலையோரங்களில் குவிந்திருந்தன. இவ்வாறாக டன் கணக்கில் குவிந்திருந்த குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் கொட்டும் மழையிலும் ஈடுபட்டனா்.

திருவண்ணாமலை மாநகா் மற்றும் கிரிவலப் பாதை முழுவதும் 500 டன் அளவுக்கு குப்பைகள் குவிந்து கிடந்தன.

கிரிவலப் பாதை ஆணாய்பிறந்தான் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை அகற்றும் பணியில் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றிய ஆணையா் கே.எம்.பழனி, வட்டார வளா்ச்சி அலுவலா் கோ.அண்ணாமலை ஆகியோரது தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.

மேலும் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவின் பேரில் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்களின் வழிகாட்டுதலின் பேரில் தூய்மைப் பணிகள் தொடா்ந்து நடைபெற்றன.

தூய்மைப் பணியாளா்களுக்கு மாநகராட்சி நிா்வாகம் கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவில்லை என புகாா் எழுந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.