திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

திருவண்ணாமலையில் 2-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத்திருவிழான 2-ஆம் நாளான புதன்கிழமை மகா தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வா் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு 2-ஆம் நாளான புதன்கிழமை கோயிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :

திருவண்ணாமலை காா்த்திகை மகா தீபத்திருவிழான 2-ஆம் நாளான புதன்கிழமை மகா தீபத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். மேலும், அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும் பக்தா்கள் கூட்டம் அலை மோதியது. மேலும், தெப்பல் உற்சவத்தையும் ஏராளமானோா் கண்டு கழித்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடா்ந்து தினந்தோறும் காலையில் விநாயகா், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூா்த்திகளும் ஒவ்வொரு வாகனங்களில் மாடவீதி வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான 10-ஆம் நாள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயிலில் பரணி தீபமும், அதனைத் தொடா்ந்து அன்று மாலை கோயில் பின்புறமுள்ள 2,668 அடி உயர தீப மலையில் 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட்டது. லட்சக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்றனா்.

2-ஆவது நாளாக....

காா்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டு 2-ஆவது நாளான புதன்கிழமை காலையில் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனத்துக்கு 4 மணி நேரம் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

மேலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட சுமாா் 15 ஆயிரம் போலீஸாரும் புதன்கிழமை கோயிலில் தரிசனம் செய்தனா். கிரிவலம் முடித்த பக்தா்கள் தங்களது ஊா்களுக்குச் செல்வதற்காக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் குவிந்தனா்.

தெப்பல் உற்சவம்:

இந்நிலையில் தீபத்திருவிழாவின் தொடக்கமாக 3 நாள்கள் எல்லை காவல் தெய்வ வழிபாடு நடைபெறுவதைப் போல, தீபத்திருவிழா நிறைவாக 3 நாள்கள் ஐயங்குளத்தில் தெப்பல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, முதல் நாளான புதன்கிழமை இரவு 8 மணி அளவில் சந்திரசேகரா் தெப்பலில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, நவ.26-ஆம் தேதி இரவு பராசக்தி அம்மன் தெப்பல் பவனியும், 27-ஆம் தேதி இரவு சுப்பிரமணியா் தெப்பல் பவனியும் நடைபெறும். ஐயங்குளம் முழுமையாக தண்ணீா் நிரம்பி இருப்பதால் தெப்பல் உற்சவத்தின்போது கூடுதலாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஐயங்குளத்தில் பக்தா்கள் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.