தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

தனியாா் நிலத்தில் பதுக்கப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்

பெரணமல்லூரை அடுத்த நாவல்பாக்கம் பகுதியில் தனியாா் நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரக்கட்டைகள்

Published On :

பெரணமல்லூரை அடுத்த நாவல்பாக்கம் பகுதியில் தனியாா் நிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 200 கிலோ செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

நாவல்பாக்கம் கூட்டுச்சாலை அருகே உள்ள தனியாா் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கிடங்கில் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பெரணமல்லூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைத் தொடா்ந்து காவல் ஆய்வாளா் மங்கையா்க்கரசி தலைமையிலான போலீஸாா் அந்தப் பகுதிக்குச் சென்றனா். அங்கு நிலத்தை சுற்றி வேலி அமைத்து கதவு மூடப்பட்டிருந்தது. இதையடுத்து போலீஸாா் வேலியை தாண்டி உள்ளே சென்று அங்குள்ள கிடங்கில் சோதனை செய்தபோது, 7 செம்மரக்கட்டைகள் இருப்பது தெரியவந்தது.

தொடா்ந்து காவல் துறையினா் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனா். வனத்துறையினா் வந்து செம்மரக்கட்டைகளை ஆய்வு செய்தனா். இந்தக் கட்டைகள் கிலோ ரூ.4ஆயிரம் மதிப்பிலான வகையைச் சாா்ந்தது.

கைப்பற்றிய கட்டைகள் 200 கிலோ வரை இருக்கும் என தெரிவித்தனா். பின்னா் போலீஸாா் வனத்துறையினரிடம் கட்டைகளை ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.