/

இந்திய குடியரசுக் கட்சி நாளை ஆர்ப்பாட்டம்

ஆதிதிராவிட இன மாணவர்களின் கல்வி பயிற்சிக்கான ஊக்கத் தொகை குறைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்திய குடியரசுக் கட்சி

News image
Updated On :9 நவம்பர் 2017, 6:58 pm

DIN

ஆதிதிராவிட இன மாணவர்களின் கல்வி பயிற்சிக்கான ஊக்கத் தொகை குறைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்திய குடியரசுக் கட்சி சார்பில் சனிக்கிழமை (நவம்பர் 11) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர்
எம்.தங்கராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆதிதிராவிட இன மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி பயிற்சிக்கான ஊக்கத் தொகையை குறைத்து வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்வது, இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை செல்ல அரசு நிதியுதவி வழங்குவது போல தலித் பிக்குகளுக்கும், பெளதர்கள் புனித யாத்திரை செல்ல நிதியுதவி வழங்கவும் வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இதில், இந்திய குடியரசுக் கட்சி தமிழ் மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப் பேரவைத் தலைவருமான செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
கட்சியின் பொருளாளர் கே.நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் செய்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.