கொசு உற்பத்தி: 2 பேருக்கு அபராதம்

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 2 பேருக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
Updated on
1 min read

டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமான 2 பேருக்கு நகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்தது.
வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையர் அசோக்குமார் சுகாதார அலுவலர் பழனிசாமி, ஆய்வாளர் சாமி கர்ணல் ஆகியோர் காகிதக்கார தெரு, டிரங்க் ரோடு பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கு பழைய இரும்பு  சாமான்கள் கடை வைத்திருக்கும்  ஆரோன்பாஷா, ஹாசீம் ஆகியோரது கடைகளின் அருகில்  கொசு உற்பத்தியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இருவருக்கும் தலா ரூ. 800 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
நகரில் தொடர்ந்து ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும். டெங்கு கொசு  உற்பத்திக்கு காரணமானவர்களை கண்டறிந்து அபராதம் விதிப்பதுடன், தேவைப்பட்டால்  அவர்கள் மீது வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் அசோக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com