உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

"குழந்தைகளின் உளவியல் பிரச்னைகளைக் களைவது அவசியம்'

குழந்தைகளின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவும், உளவியல் பிரச்னைகளைக் களையவும் மாவட்ட கல்வித் துறையுடன் சமூகப் பாதுகாப்புத்

Updated On :19 ஏப்ரல் 2018, 1:18 am IST

குழந்தைகளின் நலன், பாதுகாப்பை உறுதி செய்யவும், உளவியல் பிரச்னைகளைக் களையவும் மாவட்ட கல்வித் துறையுடன் சமூகப் பாதுகாப்புத் துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்று மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் கேட்டுக் கொண்டார்.
பெண்கள், குழந்தைகளை வணிக ரீதியாக கடத்தல், பாலியல் சுரண்டலில் இருந்து தடுத்தல் குறித்த மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்புக் கூட்டம் வேலூர் ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. 
இதில், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ராமலிங்கம் பேசியதாவது: வேலூர் மாவட்டத்தில் நர்சரி பள்ளி, மெட்ரிக். பள்ளி, சிபிஎஸ்சி பள்ளி, கேந்திரிய வித்யாலயா, ஐசிஎஸ்இ ஆகிய பள்ளிகளில் இலவச கல்வித் திட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வி பயில விரும்பும் குழந்தைகள் இணையவழியில் ஏப்ரல் 20 முதல் மே 18-ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதில், 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும். இக்கல்வித் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். 
குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்த புகார்களை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைப் பாதுகாப்பு ஆணையத் தலைவரின் தொலைபேசி எண் 044-26421359,  ‌s​c‌p​c‌r‌t‌n@‌g‌m​a‌i‌l.​c‌o‌m, ‌sc‌p​c‌r.‌t‌n.‌g‌o‌v.‌i‌n  ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தெரிவிக்கலாம். 
ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலருடன் இணைந்து அரக்கோணம், காந்தி நகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியைத் தேர்வு செய்து, சிறப்பு கல்வி முறையைப் பயன்படுத்தி மாணவ, மாணவிகளின் கல்வி வளர்ச்சித் திறனை ஒரு ஆண்டுக்குள் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளின் நலன், பாதுகாப்பு குறித்தும் உளவியல் பிரச்னைகளை களைய மாவட்ட கல்வித் துறையுடன் சமூகப் பாதுகாப்புத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்துக்கு ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். திட்ட இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி முகமை) பெரியசாமி, சிவராமன் (மகளிர் திட்டம்), மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் நிஷாந்தினி, முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.