நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

பைக்குகள் மோதல்: கணவர் சாவு; மனைவி காயம்

வாணியம்பாடி அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி காயம் அடைந்தார். 

Updated On :30 ஜனவரி 2024, 10:02 pm IST

வாணியம்பாடி அருகே பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் கணவர் உயிரிழந்தார். மனைவி காயம் அடைந்தார். 
வாணியம்பாடியை அடுத்த குரும்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் தாமோதரன்(28). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி கவுரா(23). இருவரும் ஞாயிற்றுக்கிழமை பைக்கில் நாட்டறம்பள்ளியில் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மாலையில் திரும்பிக் கொண்டிருந்தனர். நெக்குந்தி அருகே தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது, நாட்டறம்பள்ளியிலிருந்து வாணியம்பாடி நோக்கி வந்த மற்றொரு பைக், தாமோதரன் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த  தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கவுரா பலத்த காயம் அடைந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கவுராவை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றொரு பைக்கில் வந்த சந்தோஷ், வினோத், விக்னேஷ் ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்து, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.