இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க  பிரதமருக்கு அழுத்தம் தர வேண்டும்: தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 11:28 pm

DIN

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு பிரதமருக்கு தமிழக மூத்த அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்தார்.
பெரியார் மற்றும் அம்பேத்கர் நூலகத் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஞாயிற்றுக்கிழமை வேலூர் வந்தார். 
அப்போது வாலாஜாபேட்டையை அடுத்த சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி அருகே செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்துக்கு காவிரி நீர் நிச்சயம் கிடைக்காது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணி சுவாமி கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. காவிரி நீர் தமிழகத்தின் உரிமை. அதைத் தர முடியாது எனக் கூற கர்நாடகத்துக்கு உரிமையில்லை. அதிமுக உறுப்பினர் அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசின் நலத்திட்ட சலுகைகள் வழங்கப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. டிஎன்பிஎஸ்சி தேர்வில் வெளி மாநிலத்தாரும் பங்கு பெறலாம் என்ற முடிவை அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசின் வேலைகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். குரூப் 1 தேர்வு எழுதுவோருக்கான உச்சவரம்பு வயது தமிழகத்தில் 35-ஆக இருக்கிறது. பிற மாநிலங்களில் இருப்பது போல் வயது உச்சவரம்பை தமிழக அரசு  உயர்த்த வேண்டும்.
தமிழர்  வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்  என்ற புதிய சட்டத்தை தமிழக அரசு வரும்  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இயற்ற வேண்டும். தமிழக அரசுப் பணிக்கு  பணம் பெற்றுக் கொண்டு  வெளிமாநிலத்தவரை பணியில் அமர்த்துவதை அரசு தடுக்க வேண்டும். இதில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய வேண்டும். தமிழகத்துக்குள் யார், யாரோ உலாவுகின்றனர். இதனால் தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. இதைத்  தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் வேல்முருகன். 
 கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சுதாகரன், மாவட்டச் செயலாளர் கஜேந்திரன், நகரத் தலைவர் பிரபாகரன், மாவட்டப் பொருளார் கோபி, வாலாஜாபேட்டை நகரச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.