இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தரமற்ற குடிநீர்: தனியார் நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்

அரக்கோணம் நகரில் தரமற்றக் குடிநீரை விற்பனை செய்ததாக தனியார் குடிநீர் நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:26 pm

DIN

அரக்கோணம் நகரில் தரமற்றக் குடிநீரை விற்பனை செய்ததாக தனியார் குடிநீர் நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 
வேலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தரமற்ற உணவுப் பொருள்கள் இருப்பதாக வந்த தொடர் புகார்களை அடுத்து மாவட்டத்தின் அனைத்து உணவு மற்றும் உணவுப் பொருள்களை விற்கும் வணிக நிறுவனங்களில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அரக்கோணத்தில் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே.எஸ்.தேவராஜ் பல்வேறு நிறுவனங்களில் சோதனை நடத்தினார். அதில் தரமற்றக் குடிநீரை உற்பத்தி செய்ததாக அரக்கோணத்தை அடுத்த அம்பரிஷபுரத்தில் உள்ள தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும், அங்கிருந்த குடிநீரின் மாதிரிகள் தொடர்ந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில், அந்நிறுவன தயாரிப்புகளில் குறைகள் தெரியவந்தால் நிறுவனத்தை மூட பரிந்துரைக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்பு அலுவலர் தெரிவித்தார்.
தொடர்ந்து, நகரில் உள்ள பானிபூரி விற்கும் கடைகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் சோதனை மேற்கொண்டார். இதில், அனைத்து கடைகளிலும் இருந்த கலர் ஏற்றும் திரவங்கள், பிளாஸ்டிக் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சாலைகளில் உள்ள உணவு விற்கும் வண்டிகளிலும் சோதனை நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.