இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

"மக்கள் சேவைக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் ஜீன் ஹென்றி டூனன்ட்'

மக்கள் சேவைக்காக தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்தவர் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஜீன் ஹென்றி டூனன்ட் என  வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் க.முருகன் கூறினார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 2:02 am

DIN

மக்கள் சேவைக்காக தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்தவர் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஜீன் ஹென்றி டூனன்ட் என  வேலூர் திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் க.முருகன் கூறினார்.
 வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக இளையோர் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில்,  யூத் அண்டு ஹெல்த் என்ற தலைப்பில் மண்டல அளவிலான தன்னார்வலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான 3 நாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் பல்கலைக்கழக வளாக  பல்நோக்கு கலையரங்கில் புதன்கிழமை தொடங்கியது. இதில் ரத்த தானம், முதலுதவி, உடல் நலம், பேரிடர் மேலாண்மை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது.
இளையோர் பல்கலைக்கழகப் பொருளியல் துறைத் தலைவர் சி.தண்டபாணி வரவேற்றார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் ஜீன் ஹென்றி டூனன்ட்டின் உருவப் படத்தை திறந்து வைத்தார். பின்னர், முகாமைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:
மக்கள் சேவைக்காக தனது சொந்த வாழ்க்கையையே தியாகம் செய்தவர் செஞ்சிலுவைச் சங்கத்தை நிறுவிய ஜீன் ஹென்றி டூனன்ட். அவரது தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தவும், அவரைப் போல் மக்கள் சேவையில் மாணவர்களை ஈடுபட வைப்பதே இந்த புத்தாக்கப் பயிற்சி முகாமின் நோக்கம் ஆகும். 
இதற்கான விழிப்புணர்வை மாணவ சமுதாயத்தினரிடையே ஏற்படுத்துவது இளையோர் செஞ்சிலுவைச் சங்க தன்னார்வலர்கள் மற்றும்  திட்ட அலுவலர்களின் முக்கியக் கடமையாகும் என்றார். 
பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) வெ.பெருவழுதி, பல்கலைக்கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் ரமணன், வேதியியல் துறைத் தலைவர் சையத் ஷபி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 பல்கலைக்கழக பதிவாளர் பா.செந்தில்குமார், இளையோர் செஞ்சிலுவை சங்க மாவட்ட அமைப்பாளர் ஆமினாள் பிபி, பல்கலைக்கழகப் பொருளியல் துறை உதவிப் பேராசிரியர் ப.சென்னகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தில்குமார் மற்றும் தன்னார்வலர்கள் இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொருளியல் துறை இணைப் பேராசிரியர் ஒய்.யோகானந்தம் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.