வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நுகர்பொருள் வாணிப கிடங்கில் தீ விபத்து

காட்பாடி அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காலி கோணிப்பைகள் எரிந்து சேதமடைந்தன.

News image
Updated On :1 மார்ச் 2018, 9:09 pm

DIN

காட்பாடி அருகே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் காலி கோணிப்பைகள் எரிந்து சேதமடைந்தன.
காட்பாடி அருகே சேவூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்குத் தேவையான அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. 
மேலும், வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்படும் ரேஷன் அரிசிகளும் இக்கிடங்கில் 
ஒப்படைக்கப்படுகின்றன.  
இந்நிலையில், இக்கிடங்கில் காலி கோணிப் பைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அறையில் புதன்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  தகவலறிந்து விரைந்து வந்த காட்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும், கிடங்கில் இருந்த ஏராளமான காலி கோணிப்பைகள் எரிந்து சேதமடைந்தன. 
உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து காட்பாடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.