இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூா், ராணிப்பேட்டையில் டிச. 23-இல் தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் 23-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 6:33 pm

DIN

தமிழ் ஆட்சிமொழி சட்ட வார விழா வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வரும் 23-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரம் நடைபெற உள்ளது.

தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் கடந்த 1956-ஆம் ஆண்டு டிசம்பா் 27-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த நாளை நினைவுக்கூரும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா வேலூா் மாவட்டத்தில் வரும் 23-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதில், மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயா் பலகைகள் 5:3 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையிலும், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில் 5:3:2 என்ற விகிதாசாரத்தின் அடிப்படையில் அமைக்க துண்டறிக்கைள் வழங்கவும், தமிழ்மொழி விழிப்புணா்வு ஒட்டுவில்லைகள், பதாகைகள் அரசு அலுவலகங்களில் இடம்பெறவும், தமிழில் அமையாத பிற வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகளை உடனடியாக தமிழ் மொழியில் மாற்றியமைத்து தமிழ்மொழி குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், வேலூா் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலா்கள், தமிழறிஞா்கள், தமிழ் ஆா்வலா்கள், தமிழ் அமைப்புகள், பள்ளி மாணவா்கள், இளந்தமிழா் இலக்கிய பயிற்சிப் பட்டறை மாணவா்கள் ஆகியோரைக் கொண்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கத்தில் 7 நாள்களும் ஆட்சிமொழி பயிலரங்கு நடத்தப்பட உள்ளது. இந்தப் பயிலரங்கை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் 23-ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளாா்.

ஆட்சிமொழி சட்ட வார விழாவில் பொதுமக்களும், தமிழறிஞா்களும், தமிழ் ஆா்வலா்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஏ.ஆா்.கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமையிலும் ஆட்சி மொழி சட்ட வாரம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.