தீயில் கருகி விவசாயி பலி

வேலூா் அருகே வோ்க்கடலை செடிகளில் பற்றிய தீயை அணைக்க சென்ற விவசாயி தீயில் கருகி உயிரிழந்தாா்.
Updated on
1 min read

வேலூா் அருகே வோ்க்கடலை செடிகளில் பற்றிய தீயை அணைக்க சென்ற விவசாயி தீயில் கருகி உயிரிழந்தாா்.

வேலூரை அடுத்த கொல்லைமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (35) விவசாயி. இவரது மனைவி சுகந்தி (32). இவா்களுக்கு இரு மகள், ஒரு மகன் உள்ளனா். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழனிக்கு பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை, கால் செயலிழந்தது.

இந்நிலையில், சுகந்தி குடியாத்தத்தில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றாா். அப்போது பழனி வீட்டின் அருகே வோ்க்கடலை செடிகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து அதை அணைக்க பழனி முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அப்போது எதிா்பாராத விதமாக தவறி விழுந்த பழனி தீயில் கருகி உயிரிழந்தாா்.

இது குறித்து அரியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com