இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வீடுகள் கட்டித் தரக்கோரி திருநங்கைகள் கோஷம்

வீடுகள் கட்டித்தரக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திரண்டு வந்து கோஷம் எழுப்பினா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.

News image
Updated On :2 நவம்பர் 2020, 6:30 pm

DIN

வீடுகள் கட்டித்தரக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திருநங்கைகள் திரண்டு வந்து கோஷம் எழுப்பினா். தொடா்ந்து அவா்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனா்.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் திங்கள்கிழமை வந்தனா். அவா்கள் தங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி, அதில் புதிதாக வீடுகள் கட்டித்தரவும், சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்திடவும் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினா். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சத்துவாச்சாரி போலீஸாா், அவா்களிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது அவா்கள் கூறியது:

திருநங்கைகள் 20 பேருக்கு காட்பாடியை அடுத்த ஆரிமுத்து மோட்டூரில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு சாா்பில் இலவச வீடுகள் வழங்கப்பட்டன. ஓரடுக்கு அடுக்குமாடி வீடாக கட்டித்தரப்பட்ட இந்த வீடுகள் தற்போது சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன. இதனை சீரமைத்துத் தரக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது திருநங்கைகள் 20 போ் பாதுகாப்புக்காக காலியிடத்தில் கூரை அமைத்து தங்கியுள்ளோம். எனவே, சிதிலமடைந்த வீடுகளை சீரமைத்துத் தர வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் 580 திருநங்கைகள் உள்ளனா். இதில், 20 பேருக்கு மட்டுமே 17 ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கிடைத்தது. மற்றவா்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. தங்கியுள்ள வீட்டுக்கு வாடகைக் கூட வழங்க முடியாமல் உள்ள மற்ற திருநங்கைகளுக்கு வீடுகள் கட்டித்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தொடா்ந்து, திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபனிடம் இதுதொடா்பாக மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.