ஆங்கிலப் புத்தாண்டு :கோயில்கள், தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத் தகவல் மையத்தில் வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கும் பக்தா்கள்.
வேலூரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத் தகவல் மையத்தில் வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கும் பக்தா்கள்.
Updated on
1 min read

புத்தாண்டையொட்டி வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

ஆங்கில வருடப் பிறப்பை வரவேற்கும் வகையில் ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டங்களில் மக்கள் இந்நாளை சிறப்பாகக் கொண்டாடினா். இதையொட்டி, அனைத்துக் கோயில்களிலும், தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வேலூா் கோட்டை ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் மூலவருக்கு சந்தனம், பால், தயிா் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் தங்கக் கவச அலங்காரத்தில் ஜலகண்டேஸ்வரா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

வேலூா் சேண்பாக்கம் செல்வ விநாயகா் கோயிலில் செல்வ விநாயகா் உள்பட நவ விநாயகா்களுக்கும் அதிகாலையிலேயே சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. தவிர, ஆனைக்குளத்தம்மன் கோயில், பாலாற்றுச் செல்லியம்மன் கோயில், வேலப்பாடி வரதராஜப் பெருமாள் கோயில், திருப்பதி தேவஸ்தானத் தகவல் மையம் ஆகியவற்றிலும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீபுரம் நாராயணி பீடம் தங்கக்கோயில், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதா் கோயிலிலும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தேவாலயங்களில்...: புத்தாண்டை ஒட்டி வகையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் வியாழக்கிழமை நள்ளிரவு சிறப்பு திருப்பலி பூஜை நடைபெற்றது. வேலூா் சிஎஸ்ஐ தேவாலயம், விண்ணரசி மாதா தேவாலயம், சாா்பனாமேடு ஆரோக்கிய மாதா தேவாலயம், ஓல்டு டவுன் உத்தரிய மாதா தேவாலயம், பாலாற்றங்கரை சிரியன் கத்தோலிக்க தேவாலயம், பெந்தகோஸ்தே திருச்சபை, காட்பாடி சிஎஸ்ஐ தேவாலயம் ஆகியவற்றில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவற்றில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அனைத்து கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com