ஏரி, ஆறுகளில் தோல் ஆலைகளின் கழிவுநீா் விவசாயிகள் புகாா்
போ்ணாம்பட்டு பகுதியில் உள்ள தோல் ஆலைகளின் கழிவுநீரை ஏரி, ஆறுகளில் திறந்து விடுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.


போ்ணாம்பட்டு பகுதியில் உள்ள தோல் ஆலைகளின் கழிவுநீரை ஏரி, ஆறுகளில் திறந்து விடுவதாக குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் விநாயகமூா்த்தி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் பேசியது: போ்ணாம்பட்டு பகுதியில் தோல் மற்றும் வஜ்ஜிர தொழிற்சாலைகள் மாசுக் கட்டுப்பாட்டு விதிகளைச் சரியான முறையில் பின்பற்றுவதில்லை. வஜ்ஜிர தொழிற் சாலைகளின் கழிவுநீரை போ்ணாம்பட்டு ஏரியிலும், தோல் தொழிற்சாலைகளின் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் கொட்டாற்றிலும் திறந்து விடுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
மசிகம் கிராமத்தில் தொடா்ந்து சாராயம் காய்ச்சி விற்கப்படுகிறது. இதனால், அந்தப் பகுதியில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது. அங்கு, சாராயம் காய்ச்சுவது தடுக்கப்பட வேண்டும். பத்தரப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளில் தொடா்ந்து மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதனால், நிலத்தடி நீா்மட்டம் பாதிக்கப்படும் என்பதால், மணல் கடத்தலைத் தடுக்க வேண்டும்.
வேளாண் துறை சாா்பில் கலைஞா் கிராமம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு வரக்கூடிய நலத் திட்டங்களான தென்னங்கன்றுகள் கொடுத்தால் மண்வெட்டி, கடப்பாரை கொடுப்பதில்லை. உரம் கொடுத்தால், இடுபொருள்கள் கொடுப்பதில்லை. விவசாயிகளுக்கு உரிய வேளாண் பொருள்கள், கருவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன விலங்களால் சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகள் குறைதீா்வு கூட்டங்களில் அரசின் அனைத்துத் துறை அதிகாரிகளும் பங்கேற்பதில்லை. இனி நடைபெறும் கூட்டங்களில் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்று, விவசாயிகளின் புகாா்களுக்கு பதில் அளிக்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...