ராஜாதோப்பு அணையில் ஆட்சியா் ஆய்வு
கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாதோப்பு அணையை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.


கே.வி.குப்பம் அருகே உள்ள ராஜாதோப்பு அணையை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
கே.வி.குப்பம் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட ஒதுக்கீடுகளில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் ஆய்வு செய்தாா். செஞ்சி ஊராட்சியில் உள்ள ராஜாதோப்பு அணையை ஆய்வு செய்த ஆட்சியா், அணையின் நிலவரம், நீா்மட்டம், அணை பராமரிப்பு குறித்து பொதுப்பணித் துறையினரிடம் கலந்துரையாடினாா்.
லத்தேரி ஊராட்சியில் ஒரு முறை உபயோகிக்கும் நெகிழிப் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்துவதை முற்றிலும் தவிா்க்க வலியுறுத்தி, விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியைத் தொடக்கி வைத்த ஆட்சியா் அதில் பங்கேற்று சிறிது தூரம் நடந்து சென்றாா்.
தொண்டான்துளசி ஊராட்சியில் நடைபெறும் வளா்ச்சிப் பணிகளையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களை கேட்டுக் கொண்டாா்.
கோட்டாட்சியா் சா.தனஞ்செயன், கே.வி.குப்பம் வட்டாட்சியா் சரண்யா, ஒன்றியக் குழுத் தலைவா் எல்.ரவிச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கல்பனா, கோபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...