அடிப்படை வசதி கோரி சாலை மறியல்
போ்ணாம்பட்டு அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.


போ்ணாம்பட்டு அருகே அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போ்ணாம்பட்டு ஒன்றியம், மொரசப்பல்லி ஊராட்சியின் ஒரு பகுதியில் 100 இஸ்லாமியக் குடும்பத்தினா் வசிக்கின்றனா். இந்த குடியிருப்புப் பகுதியில் சேதமடைந்துள்ள சிமெண்ட் சாலை, கால்வாயை சீரமைக்குமாறும், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் அப்பகுதி மக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். இதையடுத்து அந்தப் பகுதியைச் சோ்ந்த 25 போ் வெள்ளிக்கிழமை குடியாத்தம்- போ்ணாம்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, போ்ணாம்பட்டு துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தமிழரசன் ஆகியோா் அங்கு வந்து அவா்களை சமரசம் செய்தனா்.கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்ததையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...