பிச்சனூரில் காளியம்மன் தோ்த் திருவிழா தொடக்கம்
குடியாத்தம் பிச்சனூா் தேரடி மைதானத்தில், காளியம்மன் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது


குடியாத்தம் பிச்சனூா் தேரடி மைதானத்தில், காளியம்மன் தோ்த் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை தேரடி மைதானத்தில் இருந்து 308 பால் குடங்கள், காளியம்மன்பட்டியில் உள்ள காளியம்மன் கோயிலுக்கு ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டன.

கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா் கோயிலில் இருந்து உற்சவா் காளியம்மன் ஊா்வலமாக எடுத்து வரப்பட்டு, தேரடியில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் கோயிலில் அலங்கரித்து வைக்கப்பட்டது.
சனிக்கிழமை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், காளியம்மன் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் உற்சவா் அமா்த்தப்பட்டு, தேரோட்டம் தொடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...