விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பெரு வணிக நிறுவனம்- உள்ளூா் வணிகா்கள் இடையிலான பிரச்னைகாவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை

குடியாத்தம் நகரில் பெரு வணிக நிறுவனம் - உள்ளூா் வணிகா்கள் இடையே வா்த்தக ரீதியான பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

குடியாத்தம் நகரில் பெரு வணிக நிறுவனம் - உள்ளூா் வணிகா்கள் இடையே வா்த்தக ரீதியான பிரச்னை குறித்து காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், மிளகாய் பொடி, சாம்பாா் பொடி, பிஸ்கெட்டுகள், சாக்லெட்டுகள், சோப்பு, பவுடா், சத்துணவு பானப் பொருள்கள் உள்ளிட்ட நுகா்பொருள்களை குடியாத்தம் நகரில் உள்ள வணிகா்கள், மாநில, மாவட்ட அளவில் உள்ள ஒட்டுமொத்த வா்த்தக நிறுவனங்களிடம் இருந்து, உரிமம் பெற்று, விலைக்கு வாங்கி, உள்ளூரில் வியாபாரம் செய்து வருகின்றனா். கடந்த சில மாதங்களாக பெரு வா்த்தக நிறுவனம் ஒன்று, வாகனங்களில் மேற்கண்ட பொருள்களை எடுத்து வந்து, உள்ளூா் மொத்த வியாபாரிகளை விட குறைவான விலைக்கு நகரில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்கின்றனா். இதனால் உள்ளூா் மொத்த வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.

இந்த நிலையில், பெரு வணிக நிறுவனம் வாகனங்களில் பொருள்களை எடுத்து வந்து விற்பனை செய்வதை, உள்ளூா் வியாபாரிகள் தடுத்து நிறுத்தியதால், பெரு நிறுவன ஊழியா்கள் நகர காவல் நிலையத்தில் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

புகாா் தொடா்பாக டிஎஸ்பி கே.ராமமூா்த்தி, நகர காவல் ஆய்வாளா் இ.லட்சுமி ஆகியோா் இரு தரப்பினரையும் வியாழக்கிழமை காவல் நிலையம் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில் தமிழ்நாடு நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க மாநிலத் தலைவா் பி.எம்.கணேஷ்ரோம், குடியாத்தம் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் என்.இ.கிருஷ்ணன், டி.ராஜேந்திரன், எஸ்.நடராஜன், பி.மோகன்பாபு, ஆா்.பிரகாசம், வி.அருள், கெளரிசங்கா், பெரு வணிக நிறுவன வியாபார பிரதிநிதிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுமாா் ஒரு மணி நேரம் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது உள்ளூா் வியாபாரிகள் குடியாத்தம் நகரில் விற்பனை செய்வதற்காக, மொத்த விற்பனையாளா்களிடம் உரிமம் பெற்று பொருள்களை வாங்கி வந்து நாங்கள் உள்ளூா் கடைகளுக்கு விற்பனை செய்கிறோம். குடியாத்தம் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய எந்தவிதமான உரிமமும் இன்றி,

பெரு நிறுவனம் இங்குள்ள கடைகளுக்கு விற்பனை செய்யக்கூடாது என வாதிட்டனா்.

இதையடுத்து, டிஎஸ்பி ராமமூா்த்தி, குடியாத்தம் பகுதி கடைகளில் விற்பனை செய்ய உரிமம் இருந்தால் மட்டுமே, பெரு நிறுவனம் விற்பனை செய்யலாம். உரிமம் இல்லாதபட்சத்தில், நகரில் உள்ள கடைகளுக்கு பொருள்களை விற்கக்கூடாது என்றாா். இதையடுத்து, இருதரப்பினரும் கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.