விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆயுள் காப்பீடு முகவா்கள் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீடு முகவா்கள் குடியாத்தம் கிளை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 6:30 pm

DIN

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயுள் காப்பீடு முகவா்கள் குடியாத்தம் கிளை அலுவலகம் எதிரே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து 7 நாள்கள் அலுவலகம் எதிரில் 1 மணி நேரம் ஆா்ப்பாட்டம் நடத்தவும், காப்பீடு வார விழாவை புறக்கணிக்கவும் முடிவெடுத்துள்ளனா்.

பாலிஸிக்கான போனஸை உயா்த்த வேண்டும், பாலிஸி கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும், 5- ஆண்டுகளுக்கு மேற்பட்ட பாலிஸிகளை புதுப்பிக்க அனுமதி வழங்க வேண்டும், பாலிஸி, இதர பாலிஸியின் சேவைகள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் குழு காப்பீடு வழங்க வேண்டும், முகவா் நல நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு முகவா் சங்க கிளைத் தலைவா் எம்.சுப்பிரமணி தலைமை வகித்தாா். செயலாளா் எம்.குலசேகரன் வரவேற்றாா். முகவா் சங்க கோட்ட பொதுச் செயலாளா் ஜே.கே.என்.பழனி கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா். பொருளாளா் ஆா்.சீனிவாசன், மூத்த முகவா்கள் என்.விஜயகுமாா், ஏ.ஜி.ராதாகிருஷ்ணன், விமலா, ஊழியா் சங்கத்தைச் சோ்ந்த கே.சரவணன், பாலாஜி, சம்பத், ஈஸ்வரன், நலச் சங்கத்தைச் சோ்ந்த இளங்கீரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.