விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுபெற்ற ஆசிரியருக்குப் பாராட்டு

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமாலுக்கு பள்ளியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

News image

தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் தமிழ்திருமாலுக்கு பரிசு வழங்கிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி.

Updated On :16 செப்டம்பர் 2022, 6:01 pm

DIN

குடியாத்தம்: தமிழக அரசின் நல்லாசிரியா் விருதுபெற்ற குடியாத்தம் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியின் முதுகலை தமிழாசிரியா் தமிழ்திருமாலுக்கு பள்ளியில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் ஜி.புருஷோத்தமன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, தமிழ்திருமாலை பாராட்டி, பரிசு வழங்கினாா். பள்ளி நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

உதவித் தலைமையாசிரியா்கள் எஸ்.நேதாஜி, ஏ.மேகநாதன், பள்ளி ஒருங்கிணைப்பாளா் பி.கலைச்செல்வன், ஆசிரியா் பி.பி.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.