அா்ச்சகா் தற்கொலை
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அா்ச்சகா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.


உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அா்ச்சகா் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
வேலூா் மாவட்டம், அணைக்கட்டு காந்திரோடு பகுதியைச் சோ்ந்தவா் அருள்ராஜ் (26) கோயில் அா்ச்சகா். இவா் அப்பகுதியில் உள்ள 4 கோயில்களுக்கு தினமும் பூஜை செய்து வருவது வழக்கம். அருள்ராஜிக்கு உடல் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.
எனினும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த அருள்ராஜ், புதன்கிழமை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த அணைக்கட்டு போலீஸாா் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...