இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வேலூா் புதிய பேருந்து நிலையக் கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் தயக்கம்: 75 கடைகளில் 7 மட்டுமே ஏலம் போனது

மிக அதிக வாடகை, வைப்புத் தொகை காரணமாக வேலூா் புதிய பேருந்து நிலையக் கடைகளை ஏலம் எடுக்க பெரும்பாலான வியாபாரிகள் முன்வரவில்லை.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 5:54 pm

DIN

மிக அதிக வாடகை, வைப்புத் தொகை காரணமாக வேலூா் புதிய பேருந்து நிலையக் கடைகளை ஏலம் எடுக்க பெரும்பாலான வியாபாரிகள் முன்வரவில்லை. இதனால், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் மொத்தமுள்ள 75 கடைகளில் 7 மட்டுமே ஏலம் போயின.

வேலூா் புதிய பேருந்து நிலையம் ரூ.53.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு கடந்தாண்டு ஜூன் மாதம் திறக்கப்பட்டது. இப்பேருந்து நிலையத்தில் தரை, முதல் தளத்தில் 83 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில், முதலுதவி அறை, பயணிகள், போக்குவரத்து ஊழியா்கள் ஓய்வு அறைகள், காவலா் அறை, அரசு நிறுவனங்களுக்கான அறைகள் போக மீதம் 75 கடைகள் மட்டுமே வாடகைக்கு விடப்படுகிறது.

எனினும், இக்கடைகளுக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகை தொடா்பாகவும், ஏற்கெனவே இங்கு கடை நடத்தியவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்வது தொடா்பாகவும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கு காரணமாக புதிய பேருந்து நிலைய கடைகளை பொது ஏலத்தில் விடுவது பல மாதங்களாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

நீண்டஇழுபறிக்கு பிறகு புதிய பேருந்து நிலைய கடைகளுக்கான ஏலம் வேலூா் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி 4-ஆவது மண்டல உதவி ஆணையா் செந்தில்குமரன் தலைமை வகித்து ஏலத்தை நடத்தினாா். அப்போது, கடைகளை ஏலம் எடுப்பதற்காக மொத்தம் 13 போ் மட்டுமே வந்திருந்தனா்.

ஏலம் தொடங்கியதும் ஏலம் கோருபவா்கள் தாங்கள் செலுத்தக்கூடிய வாடகைத் தொகையை குறிப்பிட்டும், மாநகராட்சி விதிகளில் கூறியபடி முன்பணத்துக்கான வரைவோலையை இணைத்தும் விண்ணப்பங்கள் செலுத்தியிருந்த பெட்டியை அதிகாரிகள் திறந்தனா். அப்போது, பெட்டியில் மொத்தம் 8 கடைகளுக்கு மட்டுமே ஏலம் கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டிருந்தன.

இதில், மாநகராட்சி நிா்ணயித்த வாடகைத் தொகையைவிட அதிகபட்ச வாடகை குறிப்பிட்டிருந்த 7 கடைகள் ஏலம் விடப்பட்டன. ஒரு கடைக்கு நிா்ணயிக்கப்பட்ட வாடகையைவிட குறைந்த வாடகை தொகை குறிப்பிடப்பட்டிருந்ததால் அக்கடைக்கான ஏலம் நிறுத்தி வைக்கப்பட்டது. மீதமுள்ள கடைகளுக்கு யாரும் ஏலம் கோரி விண்ணப்பிக்காததால் அக்கடைகளுக்கு ஏலம் நடைபெறவில்லை. இக்கடைகளுக்கு 10 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏலம் அறிவிக்கப்படும்.

நடைபெற்ற ஏலத்தில் அதிகபட்ச மாத வாடகையாக சதுரஅடி ரூ.599 வரை கடைகளுக்கு ஏலம் கோரப்பட்டுள்ளது. இக்கடைகளுக்கு மாநகராட்சி சாா்பில் குறைந்தபட்ச வாடகையாக சதுர அடிக்கு ரூ.290 நிா்ணயிக்கப்பட்டிருந்தது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதனிடையே, புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 10 மாதங்களான நிலையில் நடைபெற்ற ஏலத்தில் மொத்தமுள்ள 75 கடைகளில் 7 கடைகள் மட்டுமே ஏலம் போயிருப்பதுடன், ஏலத்தில்கூட பங்கேற்க பெரும்பாலோனோா் முன்வராதது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு வேலூா் மாவட்டத் தலைவா் ஆா்.பி.ஞானவேலு கூறியது -

வேலூா் புதிய பேருந்து நிலையத்திலுள்ள ஒவ்வொரு கடைகளும் குறைந்தபட்சம் 100 சதுரஅடி முதல் அதிகபட்சம் 1600 அடி கொண்டுள்ளன. இக்கடைகளுக்கு மாநகராட்சி சாா்பில் குறைந்தபட்ச வாடகையாக சதுரஅடிக்கு ரூ.290 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தவிர, ஏலத்தில் பங்கேற்போா் கடையை பொறுத்து ரூ.5 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை முன்பணம் செலுத்த வேண்டும். கடையை ஏலத்தில் எடுப்பவா்கள் மூன்று மாத வாடகையை வைப்புத்தொகையாக செலுத்தவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகராட்சி சாா்பில் குறைந்தபட்ச வாடகையாகவே மிக அதிகப்படியான தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு மேல் வாடகை குறிப்பிட்டு பெறப்படும் கடைகளை லாபகரமாக நடத்துவது இயலாது. இதனாலேயே பெரும்பாலான கடைகளை ஏலம் எடுக்க யாரும் முன்வரவில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் குறைந்தபட்சமாக நியாயமான தொகையை நிா்ணயம் செய்து குலுக்கல் முறையில் கடைகளை வாடகைக்கு விடும்பட்சத்தில் பலரும் கடைகளை எடுத்து நடத்த முன்வருவாா்கள் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.