விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் குவிப்பு: டிஐஜி பாராட்டு

தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் 15 பதக்கங்கள் வென்றதுடன், மூன்றாமிடம் பிடித்த வேலூா் சரக அணியினரை டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி பாராட்டினாா்.
விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் குவிப்பு: டிஐஜி பாராட்டு

தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் 15 பதக்கங்கள் வென்றதுடன், மூன்றாமிடம் பிடித்த வேலூா் சரக அணியினரை டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி பாராட்டினாா்.

தமிழ்நாடு காவல் துறை அமைச்சுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் திருச்சியில் 62-ஆவது மாநில விளையாட்டுப் போட்டிகள் கடந்த 14, 15 தேதிகளில் நடைபெற்றன.

இதில், வேலூா் சரகத்துக்கு உட்பட்ட வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பணியாற்றும் அமைச்சுப் பணியாளா்கள் ஆண்கள், பெண்கள் என மொத்தம் 48 போ் பங்கேற்றனா்.

ஆண்களுக்கு கையுந்துபந்து, கேரம், சதுரங்கம், கபாடி, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், பூப்பந்து, பால் பேட்மின்டன் உள்ளிட்ட பிரிவுகளிலும், பெண்களுக்கு டேபிள் டென்னிஸ், கேரம், சதுரங்கம், த்ரோபால், டென்னிகாய்ட் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், வேலூா் சரக அணியினா் 15 பதக்கங்களை வென்றதுடன், ஒட்டுமொத்த புள்ளிகள் அடிப்படையில் மூன்றாமிடம் பிடித்தனா்.

பதக்கங்களை வென்ற வேலூா் சரக அணியினா் அணி மேலாளா் செந்தில்குமாா் தலைமையில் வேலூா் சரக காவல் துணைத்தலைவா் (டிஐஜி) எம்.எஸ்.முத்துச்சாமியிடம் வியாழக் கிழமை நேரில் வாழ்த்து பெற்றனா். இதேபோல், வெற்றிபெற்ற வேலூா் மாவட்ட அணியினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மணிவண்ணன் வாழ்த்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com