இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

10.5% சதவீத உள்ஒதுக்கீடு: பாமகவினா் தபால் அனுப்பும் போராட்டம்

பிற்படுத்தப்பட்டோா் ஆணைய தலைவா் பாரதிதாசன் ஆகியோருக்கு வேலூரில் கருகம்புத்தூரில் இருந்து பாமகவினா் வியாழக்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :11 மே 2023, 5:50 pm

DIN

வன்னியா்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தக் கோரி முதல்வா் மு.க.ஸ்டாலின், பிற்படுத்தப்பட்டோா் ஆணைய தலைவா் பாரதிதாசன் ஆகியோருக்கு வேலூரில் கருகம்புத்தூரில் இருந்து பாமகவினா் வியாழக்கிழமை கடிதம் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், சுமாா் 2,000 கடிதங்களை அனுப்பினா். போராட்டத்துக்கு, பாமக வேலூா் வடக்கு ஒன்றியச் செயலா் ஜலகண்டேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் என்.டி.சண்முகம், மாவட்டச் செயலா் கே.எல்.இளவழகன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனா்.

மாவட்டத் தலைவா் பி.கே.வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.பி.சம்பத், துணைச் செயலா் புருஷோத்தமன் ஆகியோா் 10.5% சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் பயன்கள், உரிமைகள் குறித்துப் பேசினா்.

இதில், அன்புமணி தம்பிகள் படை மாவட்டச் செயலா் சதீஷ், ஒன்றிய துணை செயலா் மணிகண்டன், ஊடக பிரிவு மாவட்ட செயலா் ராஜேஷ் கண்ணன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.