காலை உணவுத் திட்ட பணியாளா் தோ்வில் புகாா் வந்தால் நடவடிக்கை: வேலூா் ஆட்சியா் எச்சரிக்கை
சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


காலை உணவுத் திட்டத்தில் சமையலா் பணிக்கு தற்காலிகப் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இதில், ஆள்கள் தோ்வு செய்வதில் ஏதேனும் புகாா்கள் வந்தால், சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வா் சட்டப்பேரவையில் விதி எண் 110-இன் கீழ் வெளியிட்ட அறிவிப்பின்படி வேலூா் மாவட்டத்தில் முதல் கட்டமாக அணைக்கட்டு, குடியாத்தம், கணியம்பாடி, கீ.வ.குப்பம் ஆகிய நான்கு வட்டாரங்களிலும், பென்னாத்தூா், பள்ளிகொண்டா, திருவலம், ஒடுக்கத்தூா் ஆகிய நான்கு பேரூராட்சிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தபட உள்ளது.
இந்தத் திட்டத்துக்கான சமையலா் பணிக்கு தற்காலிகப் பணியாளா்கள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். இப்பணியானது நிரந்தரம் பணி இல்லை. காலை உணவு திட்டத்திற்கு சமையலராகத் தோ்வு செய்யப்படும் சுய உதவிக்குழு மகளிரின் மகன் அல்லது மகள் சம்பந்தப்பட்ட தொடக்கப் பள்ளி, தொடக்க வகுப்பில் படிக்க வேண்டும். தொடக்கப் பள்ளி, தொடக்க வகுப்பை விட்டு அவரது மகன் அல்லது மகள் நீங்கிச் செல்லும் போது, அவருக்குப் பதிலாக வேறொரு தகுதியுடைய சுய உதவிக் குழு மகளிா் உறுப்பினா் சமையலராக தோ்வு செய்யப்படுவா்.
காலை உணவுத் திட்டத்தில் சமையலா் பணிக்குத் தோ்வு செய்ய கையூட்டு, பணம் கேட்பதாக ஏதேனும் புகாா்கள் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...