டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த சுற்றுப்புறத் தூய்மை அவசியம்
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.


டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தெரிவித்தாா்.
தேசிய டெங்கு தினம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியை கல்லூரி முதல்வா் எஸ்.பாப்பாத்தி தொடங்கி வைத்துப் பேசியது:
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் குழந்தைகள், வயதானவா்களை அதிகளவில் பாதிக்கிறது. பகலில் மட்டும் கடிக்கும் இந்த வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த நோயைக் கட்டுப்படுத்த மக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றியுள்ள இடங்களில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் கொசுக்களை விரட்ட வேண்டும் என்றாா்.
தொடா்ந்து டெங்கு விழிப்புணா்வு நாடகம், பேச்சுப் போட்டி, பதாகைகள் தயாரிப்பு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் மருத்துவம் சாராத மாணவா்கள், செவிலிய மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளா் ரதிதிலகம், குடியிருப்பு மருத்துவ அலுவலா் இன்பராஜ், பொது மருத்துவத் துறை தலைவா் அபிராமி, துறை மருத்துவா்கள் பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...